விஜயகாந்த், வைகோ திடீர் ஆலோசனை

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. நேற்று காலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இச்சமயம் விஜயகாந்த் அணி யில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி களை ஒதுக்குவது என்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது.

எனினும், தேமுதிகவில் ஏற்பட்டுள்ள பிளவு, விஜயகாந்த் அணியைப் பிளவுபடுத்த சில தரப்பினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தே இரு தலைவர்களும் விரிவாக விவா தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைகோ, விஜயகாந்த் சந்திப்பு குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் முதலில் அனு மதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், தமிழ்ப் புலிகள் அமைப்பு, வீரலட்சுமி தலைமையிலான தமிழர் முன் னேற்றப் படை ஆகியவையும் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!