புதிய கட்சி தொடங்கிய தேமுதிக அதிருப்தியாளர்கள்; பிரேமலதா மீது சாடல்

தமிழக சட்டமன்றத் தேர்தலை திமுகவுடன் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைமையை அக்கட்சியினர் பலரும் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், பெரும்பான்மையின ரின் விருப்பத்தை மீறி மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோத்தார் விஜயகாந்த். அவரது இந்த முடிவிற்கு கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த சந்திர குமார் உட்பட பலர் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து, சந்திர குமார் உட்பட தேமுதிக நிர்வாகி கள் பத்துப் பேர் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர்.

திமுக தூண்டுதலின் பேரில் தான் அவர்கள் அவ்வாறு செயல்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மேலும் சில தேமுதிக தலைவர்களும் குற்றஞ்சாட்டினர். தேமுதிக தலைமைத்துவத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த பலரும் தாங்கள் கட்டிய பணத் தைத் திரும்பத் தரும்படி வற்பு றுத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், சந்திரகுமார் தலைமையில் தேமுதிக அதிருப் தியாளர்கள் நேற்று சென்னையில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். கூட்டத்தில், தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏகோபித்த குரல் ஒலித்ததைத் தொடர்ந்து 'மக்கள் தேமுதிக' என்ற பெயரில் புதுக் கட்சி தொடங்குவதாக சந்திரகுமார் அறிவித்தார்.

'மக்கள் தேமுதிக' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய சந்திரகுமார் (நடுவில்) தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அகற்றுவது தான் தங்கள் முதல் நோக்கம் என்று முழங்கியிருக்கிறார். படம்: தமிழகத் தகவல் சாதனம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!