கங்கைக் கரையோரம் திருவள்ளுவருக்குச் சிலை

உலகப் பொதுமறையாம் திருக் குறள் தந்த அய்யன் திருவள்ளுவர் சிலையாக நின்று வடஇந்தியா விலும் தன் புகழ் பரப்பவிருக் கிறார். திருக்குறளின் சிறப்பை உலகம் அறியச் செய்ய உறுதி பூண்டுள்ள உத்தரகாண்ட் மாநில எம்.பி.யான தருண் விஜய் தமது சொந்த மாநிலத்தில் திருவள்ளு வரின் சிலையை நிறுவவிருக் கிறார். ஹரித்துவாரில் கங்கைக் கரைப் பகுதியில் அமையவிருக் கும் அந்தச் சிலைக்காக தமது தொகுதி நிதியிலிருந்து 20 லட்ச ரூபாயை (S$40,700) அவர் அளித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டு நாளில் சிலைக்கான அடிக்கல்லைத் திறந்து வைத்தார் உத்தரகாண்ட் ஆளுநர் கே கே பால். அந்த மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலர் ரவிசங்கர், இந் நாள் கூடுதல் தலைமைச் செயலர் ராஜு, கல்வித்துறைச் செயலர் செந்தில் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஹரித்துவாரில் கங்கைக் கரையில் அமையவிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லைத் திறந்து வைத்தார் உத்தரகாண்ட் மாநில ஆளுநர் கே கே பால் (வலது). அவருடன் தருண் விஜய் எம்.பி. படம்: தருண் விஜய் ஃபேஸ்புக் பக்கம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!