சென்னையில் ஆட்டம் காணும் அதிமுக அமைச்சர் தொகுதிகள்

தமிழ­கத்­தில் மே 16ஆம் தேதி நடை­பெ­ற­வி­ருக்­கும் சட்­ட­மன்றத் தேர்­தல், போட்­டி­யி­டும் அனைத்­துக் கட்­சி­களுக்­குமே அச்­சத்தைத் தந்­துள்­ளது. குறிப்­பாக ஆளும் கட்­சி­யான அதி­மு­க­வின் அமைச்­சர்­கள் தலை­ந­கர் சென்னை­யில் வெல்­லும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறப்­படு­கிறது. அண்ணா நகர் தொகு­தி­யில் அமைச்­சர் கோகுல இந்­தி­ரா­வும் ஆயி­ரம் விளக்­குத் தொகு­தி­யில் அமைச்­சர் வளர்­ம­தி­யும் போட்­டி­யி­டு­கின்றனர். இந்த இரு தொகு­தி­களைத் தவிர, துறை­மு­கம் மற்­றும் திமுக பொரு­ளா­ளர் ஸ்டா­லின் போட்­டி­யி­டும் கொளத்­தூர் ஆகிய தொகு­தி­கள் அதி­மு­க­வின் வெற்றி வாய்ப் பைப் பறிக்க வல்ல­னவாக உள்ளதாக ஜெய­ல­லி­தா­வுக்கு உள­வுத் ­துறை தக­வல் கூறி­யுள்­ள­தாம்.

துறை­முகத் தொகு­தி­யில் அதி­மு­க­வின் வட­சென்னை தெற்கு மாவட்­டச் செய­லா­ளர் கு.சீனி­வா­சன் என்­ப­வர் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கிறார். இவ­ருக்கு எதி­ராக பி.கே.சேகர் என்­ப­வர் திமுக வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருக்­கிறார். இவர் முன்பு அதி­மு­க­வின் மாவட்­டச் செய­லா­ள­ராக இருந்த­வர். ஆயி­ரம் விளக்­குத் தொகு­தி­யில் வளர்­ம­தி­யின் முன் னாள் சீட­ரான கு.க.செல்­வம் திமுக சார்­பில் வளர்­ம­திக்கு எதி­ராக கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளார். இதேபோல் கொளத்­தூர் தொகு­தி­யில் ஸ்டா­லினை எதிர்த்து வில்­லி­வாக்­கம் அதி­முக எம்.எல்.ஏ.வான ஜே.சி.டி. பிர­பா­க­ரன் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளார். எனவே சென்னை­யில் கள­மி­றங்­கும் அதி­மு­க­வின் முக்­கிய புள்­ளி­கள் அனை­வ­ரும் வெற்­றி­பெ­றும் வாய்ப்பு குறைவு என்று கூறப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!