சிங்கக் கூட்டணியால் திமுக, அதிமுகவின் வாக்குகள் சிதறும் அபாயம்

சென்னை: தமிழகத் தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சிங்கக் கூட்டணி என்ற பெயரில் புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது. மறுபக்கம் நடிகர் கார்த்திக் தலைமையிலான விடியல் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இம்முறை திமுக, அதிமுக அணிகளில் இடம்பெற முடியாத சிறிய கட்சிகள் பல ஒன்று சேர்ந்து தனி அணிகளை அமைக்க முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்ட ணியில் இடம் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறிய நாடா ளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக், முக்குலத் தோர் ஆதரவைப் பெறும் வகையில் புதிய அணியை அமைத்தார்.

அவருடன் டாக்டர் சேதுராம னின் மூவேந்தர் முன்னணி, மக்கள் மாநாடு கட்சி, தமிழ் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தன. இந்தப் புதிய அணிக்கு 'விடியல் கூட்டணி' என்று பெயர் சூட்டப்பட்டது. கடந்த 15ஆம் தேதி புதிய அணி குறித்து செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த நடிகர் கார்த்திக், இக்கூட்டணி தென் தமிழகத்தில் பெரிய கட்சிகளுக்குப் பலத்த அடியைக் கொடுக்கும் என்றார். புதிய கூட்டணியால் தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங் களில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்குச் செல்லும் வாக்கு கள் சிதறும் என்கின்றனர் அரசி யல் நோக்கர்கள். கூட்டணி உடைந்ததால் அத் தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வாக்குகள் பெரிய அளவில் சிதறும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!