ஏன் தனித்துப் போட்டி: சீமான் விளக்கம்

நாகர்கோயில்: தமி­ழ­கத்­தில் தலை­வி­ரித்­தா­டும் லஞ்ச ஊழலை­யும் மதுவை­யும் ஒழிக்­கும் குறிக்­கோ­ளால்­தான் 'நாம் தமி­ழர்' கட்சி தனித்­துப் போட்­டி­யி­டு­கிறது என்று அக்­கட்­சி­யின் ஒருங்­கிணைப்­பா­ளர் சீமான் கூறி­யுள்­ளார். நாகர்­­­கோ­­­யி­­­லில் நடந்த கூட்­­­டத்­­­தில் மேலும் பேசிய அவர், மதுவை ஒழிப்­­­போம் என்று கூறும் இரு கட்­­­சி­­­களும் முத­­­லில் தங்க ளின் கட்­­­சி­­­களில் உள்ள உறுப்­­­பி­­­னர்­­­களின் மது ஆலை­­­களை மூட நட­­­வ­­­டிக்கை எடுக்க வேண்­­­டும். ஆட்­­­சிக்கு வந்தால் மதுவை ஒழிப்­­­போம் என்­­­கிறார்­­­கள். ஆட்­­­சி­­­யில் இருக்­­­கும்­­­போது ஏன் ஒழிக்­­­க­­­வில்லை. படிப்­­­ப­­­டி­­­யாக மூடு­­­வோம் என்­­­கிறார் ஜெய­­­ல­­­லிதா,

இதே கும­­­ரி­­­யில் சசி­­­பெ­­­ரு­­­மாள் ஒரு கடை யைத்­­­தான் மூடச் சொன்னார். அந் தக் கடையையே இன்­­­னும் மூட­­­வில்லை. படிப்­­­ப­­­டி­­­யாக குறைக்­­­கக் கூடிய எவ்வித அறி­­­கு­­­றியையும் கடந்த 5 ஆண்­­­டு­­­களில் அதி­முக அரசு காட்­­­ட­­­வில்லை. அத்தனை போராட்­­­டங்களுக்­­­கும் பதில் சொல்­­­லா­­­மல் மக்­­­களின் கோரிக்கைக்­­­குச் செவி சாய்க்­­­கா­­­மல் இப்­­­போது தேர்­­­தல் வந்த­­­வு­­­டன் படிப்­­­ப­­­டி­­­யா­கக் குறைக்­­­கி­­­றோம் என்­­­கிறார் ஜெய ­­­ல­­­லிதா. இதைத் தேர்­­­த­­­லுக்­­­கான வெற்று வாக்­­­கு­­­று­­­தி­­­யா­­­கத்­­­தான் பார்க்க முடி­­­கிறது. "தாய்­­­மொ­­­ழிக் கல்­­­வி கட்­­­டா­­­யம் தேவை," என்றார்.

அப்­­­போது கூட்­­­டத்­­­தில் குடி­போதை­யில் இருந்த ஒரு­­­வர், சீமானைப் பார்த்­­து 'தலைவா...' என்று குரல் எழுப்­­­பினார். அப்­­­போது காவல்­­­துறை­­­யி­­­னர் அந்த மனி­தரை அடித்து இழுத்­­­துச் சென்ற­­­னர். இதனைப் பார்த்த சீமான், 50 ஆண்டு கால திரா­­­வி­­­டக் கட்­­­சி­­­களின் சாதனை இது­­­தான் என்றார். {வை­குண்டத்­தில் பேசும் போது, "நாம் தமி­ழர்" கட்சி வரும் நாடா­ளு­மன்றத் தேர்­தலில் வென்று ஆட்­சியைப் பிடித்­தால் தமி­ழ­கத்­தில் திமுக, அதி­முக ஆகிய கட்­சி­களின் குடும்ப அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­லாம் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!