விமான நிலைய கழிவறையில் இரண்டு கிலோ தங்கம்

திருச்சி: விமான நிலைய கழி வறையில் கேட்பாரற்றுக் கிடந்த 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்க கட்டிகள் கண்டெடுக் கப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. அது கடத்தல் தங்க மாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், அதிகாரிகள் அதைப் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் உள்ள கழி வறையைச் சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர் அங்கு சென்றார். அப் போது கழிவறை ஓரமாக பாலிதீன் உறை ஒன்று காணப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய காவல்துறையினருக்கும் சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் அவர் தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த அதிகாரி கள், அதில் வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என சோதனையிட்டனர்.

பின்னர் அந்த உறையைத் திறந்து பார்த்தபோது அதில் 2 கிலோ எடையுள்ள எட்டு தங்கக் கட்டிகள் இருந்தன. வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளில் ஒருவர் அவற்றை கழிவறையில் வைத்துச் சென்றி ருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படு கிறது. "தேர்தலையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்த மர்ம நபர்கள் அதை வெளியில் கொண்டு சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து இந்த கழிவறையில் விட்டுச் சென்றி ருக்க வாய்ப்புண்டு," என்று அதி காரிகள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!