முதல்வர் ஜெயலலிதா கொச்சைப்படுத்துகிறார்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: வறுமை காரண மாகவே தமிழகத்தில் விவசாயி கள் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகள் எவரும் வறுமை அல்லது கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொள்ள வில்லை என முதல்வர் ஜெய லலிதா கூறியதைக் கண்டிப்ப தாகத் தெரிவித்துள்ளார். "திருச்சியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் விவசாயிகள் குடும்பப் பிரச்சினைகளால்தான் உயிரை மாய்த்துக்கொண்ட தாகக் கூறியுள்ளார். விவசாயி களின் இறப்பை கொச்சைப் படுத்தும் ஜெயலலிதாவின் இந்தக் கருத்து கண்டிக்கத் தக்கது.

"விவசாயிகளுக்கான தேர் தல் வாக்குறுதிகள் அனைத் தையும் நிறைவேற்றிவிட்டதாக வும் முதல்வர் பச்சைப் பொய் யைக் கூறியுள்ளார்," என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 2011ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கரும்பு கொள்முதல் விலை 2011ஆம் ஆண்டில் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட் டுள்ள அவர், அதற்கு மாறாக ரூ.2,100 மட்டுமே தரப்பட்டதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!