பள்ளிகளில் திருக்குறளை முழுமையாகக் கற்பிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை திருக்குறளை முழுமையாகக் கற்பிக்க வேண்டும் என்றும் அது வரும் கல்வியாண்டிலேயே நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியரான எஸ்.ராஜரத்தினம் என்பவர், திருக் குறளின் 1,330 குறட்பாக்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தர விடக் கோரி மனுத் தாக்கல் செய்தார். "இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் ஒழுக்கமும் நன்ன டத்தையும் குறைந்து வருகின்றன. அதிலும், இளைய தலைமுறை யிடம் ஒழுக்கம் பற்றிய சிந்தனை யும் பெரியோரை மதித்தலும் குறைந்துள்ளன. இதனால், இளை யர்களிடம், குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு அறத்துப்பால், பொருட் பாலில் உள்ள எல்லாக் குறள் களையும் கற்பிக்கவேண்டும்," என்று அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு குறித்து தமது வாதத்தை முன்வைத்த எதிர்த் தரப்பு வழக்கறிஞர், "ஏற்கெனவே மாணவர்களுக்குப் பாடத்திட்டத் தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள் ளது. அதைத் தவிர்த்து வேறு பல இலக்கியங்களும் பயிற்றுவிக் கப்படுகின்றன. அரசின் கொள்கை முடிவில் இதுபோன்ற கோரிக்கை களை ஏற்க முடியாது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.மகாதேவன், "மனப்பாடப் பகுதி என்ற குறுகிய அளவில் இல்லாமல் திருக்குறளை விரிவான விதத்தில், உரிய விளக்கங்களுடன், அனைத்துக் கூறுகளும் அலசப்பட்டு, மாண வர்களுக்குப் பயிற்றுவிக்கும் போது அவர்களின் அறிவும் ஞானமும் மேம்படும்.

"இன்றைக்குச் சமுதாயத்தில் பெரும் பிரச்சினைகளாக இருக்கக்கூடிய பயங்கரவாதம், கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள், வேலையின்மை, பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான வன்முறைகள், மதுவின் பாதிப்பு ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து, இளைய சமுதாயத்தினர் தங்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்வர். "ஆகவே, இவற்றைக் கருத் தில்கொண்டு உலகப் பொதுமறை யான திருக்குறளை, மனித வாழ்வு சம்பந்தப்பட்ட அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி எவ்வித வாழ்க்கை வாழவேண்டும் என வலியுறுத்தும் திருக்குறளை இளம் வயதில், குறிப்பாக ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை அறத்துப்பால், பொருட்பால் பிரிவு களில் உள்ள அனைத்துக் குறள் களையும் விளக்கமாகக் கற்பிக்க வேண்டும். இதனை 2016=-17 கல்வி ஆண்டிலிருந்து நடை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று தீர்ப்பு வழங்கினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!