சுவர் விளம்பரப் பணம் பிரிப்பதில் தகராறு: அதிமுக நிர்வாகி பலி

வேலூர்: தேர்தலுக்கான சுவர் விளம்பரப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதி அதிமுக வேட்பாளரின் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் சுவர் விளம்பரம் எழுத, கட்சி முகவர்களிடம் ரூ.5 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது. இது கிளைச் செயலர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளை நிர்வாகி குப்புசாமி, தனக்குரிய தொகை வரவில்லை என சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு மூண்டு, கைகலப்பில் முடிந்தது. இதில் சரமாரியாகத் தாக்கப்பட்ட குப்புசாமி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!