அதிகரிக்கும் சீன நீர்மூழ்கி நடமாட்டம்: அமெரிக்கா, இந்தியா கூட்டு நடவடிக்கை

இந்தியப் பெருங்கடலில் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடமாட் டத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று உதவும் நோக் கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடலுக்கடியிலான தனது நட வடிக்கைகளை சீனா அதிகரித்து வரும் வேளையில் புதுடெல்லிக் கும் வா‌ஷிங்டனுக்கும் இடையி லான உறவு வலுப்பெற்று வருவ தாகக் கூறப்படுகிறது. தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் பிலிப்பீன்ஸ், வியட்னாம், தை வான், மலேசியா ஆகிய நாடுக ளின் பகையை சீனா சம்பாதித்து வருகிறது. சீன நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் அந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் ஆதிக்கம் மிகுந்த இந்தியப் பெருங்கடலிலும் சீனா நுழையப் பார்க்கிறது. அண்மைய காலமாக இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் நட மாட்டம் அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் இச்செயல் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் ஒருசேர அக்கறை தெரிவித்து உள்ளன. ஆயுதத் தொழில்நுட்பத்தை அணுக அனுமதி அளித்ததற்குக் கைமாறாகத் தனது ராணுவத் தளங்களை அமெரிக்காவுக்குத் திறந்துவிட இந்தியா கடந்த மாதம் ஒப்புக்கொண்டது. சீனாவை அமெரிக்கா நெருக் குவதற்கு வசதியாக இந்தியா இந்நடவடிக்கையை மேற்கொண்ட தாகக் கூறப்படுகிறது. நீர்மூழ்கிப் போர் நட வடிக்கைக்கு எதிராக அமெரிக்க, இந்திய கடற்படை விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வட பிலிப் பீன்ஸ் கடலில் இந்த இரு நாடு களும் கூட்டாகப் பயிற்சியில் ஈடுபடுவது பற்றி இந்தப் பேச்சுவார்த்தை கவனம் செலுத் தும் என்று இந்திய கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!