கொலை மிரட்டல், கறுப்புக் கொடி காட்டி தாக்குதல்

தமிழகத் தேர்தல் களத்தில் தலை வர்களுக்கு எதிராகக் கொலை மிரட்டல்கள் கிளம்பி உள்ளன. பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். போட்டியிலிருந்து அவர் விலக வேண்டும் இல்லாவிட்டால் லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது. தமிழிசையின் கைபேசிக்கு வந்த குறுந்தகவல் மூலம் மர்ம நபர் ஒருவர் அந்த மிரட்டலை விடுத்திருந்தார். போலிசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் யார் என்று போலிசார் விசாரித்து வருகின்றனர். தமிழிசையைக் கொலை செய்ய மிரட்டியவர் தமிழைக் கொலை செய்துவிட்டதாக தமிழிசை வேடிக்கையாக் குறிப்பிட்டுள்ளார்.

மர்ம நபர் அனுப்பிய குறுந் தகவலில் வார்த்தைகள் பிழையாக இருந்ததைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு சொன்னார். இதற்கிடையே, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவைக் கொலை செய்ய திமுக திட்டம் தீட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த சனிக்கிழமை திருவாரூ ரில் வைகோவுக்குக் கறுப்புக் கொடி காட்டும் சாக்கில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி முத்தரசன் அவ்வாறு கூறி யிருக்கிறார். மயிலாடுதுறையில் பிரசாரம் செய்துவிட்டு திருவாரூர் வரும் வழியில் சேந்தமங்கலம் என்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் ஒன்றுதிரண்டு வைகோவுக்குக் கறுப்புக்கொடி காட்டினர்.

திருவாரூர் செல்லும் வழியில் சுமார் ஐம்பது திமுகவினர் ஒன்றாகக் கூடி வைகோவுக்கு கறுப்புக் கொடி காட்டினர். அப்போது ஏற்பட்ட தகராறில் மூவருக்குக் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்

இமாச்சலப் பிரதேசத்தில் பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் குலு என்ற மாவட்டத்தில் பல இடங்களிலும் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் பாதிப்பு