அதிமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தி யில் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் மக்கள் அவர்களை வழிமறித்து தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் தொகுதி வேட்பாளராக ஊரகத் தொழிற்துறை அமைச்சர் பி. மோகன் அறிவிக்கப்பட்டு அவரும் வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் தமது தொகுதிக்குட்பட்ட கொசப்பாடி, அரசம்பட்டு போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிக்க ஆதரவாளர் களுடன் சென்ற அமைச்சர் மோகனை அப்பகுதி மக்கள் வழிமறித்தனர். அமைச்சரும் அதிமுகவினரும் ஊருக்குள் செல்லாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனர். சுமார் 500 பேர் ஒன்றுதிரண்டு செருப்பையும் துடைப்பத்தையும் ஏந்தி ஆவேச முழக்கமிட்டனர்.

அமைச்சராக இருந்தபோது தங்களது பகுதிக்குவராததோடு எந்தவொரு வளர்ச்சிப் பணி யையும் தங்களது ஊருக்கு அவர் செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர். எதிர்ப்பு காரணமாக அமைச் சர் அங்கிருந்து திரும்பிச் சென் றார். இதேபோல தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற உயர்கல்வி அமைச்சர் பி. பழனியப்பனுக்கும் எதிர்ப்பு காத்திருந்தது. இத்தொகுதியில் போட்டியிடும் பழனியப்பன் நத்த மேடு என்னும் கிராமத்தில் வாக்குக் கேட்டு நேற்று முன் தினம் சென்றார்.

பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.ஆர். சரஸ்வதியின் முன்னிலையில் அதிமுகவினர் மோதிக்கொண்டனர். அவர்களைக் கண்டித்த சரஸ்வதி, கட்சியினர் இவ்வாறு மோதல் போக்கைக் கடைப்பிடித்தால் முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுத்தார். மோதல் காரணமாக சரஸ்வதி தமது பிரசாரத்தைப் பாதியிலேயே முடிக்க வேண்டியதாயிற்று. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!