அதிமுகவுக்கு சாதகமாக நடக்கிறது தேர்தல் ஆணையம் - முத்தரசன்

ஈரோடு: தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் (படம்) குற்றம்சாட்டி உள்ளார். ஈரோட்டில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், அண்மைய சம்பவங்கள் தனது குற்றச்சாட்டை உறுதிப் படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறினார். "கரூரைச் சேர்ந்த அன்புநாதன் என்பவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டதாகச் செய்திகள் வருகின்றன.

"அதிமுக அமைச்சர்களின் லஞ்சப் பணத்தை பதுக்கி வைத் துள்ளார் அவர். தேர்தலில் வாக்க ளிப்பதற்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக ஒவ் வொரு தொகுதிக்கும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் இறுதியாக அன்புநாதன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சமும் குடோனில் இருந்து ரூ.5 கோடியும் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்," என்றார் முத்தரசன்.

அன்புநாதன் குறித்த தகவல் களை தேர்தல் ஆணையம் மூடி மறைப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாகக் கூறினார். "இந்த தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆளும் அதிமுக நினைக் கிறது. ஆனால் அதையும் மீறி மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை," என்று முத்தரசன் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை இதர எதிர்க்கட்சிகளும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின் றன. இதனால் அன்புநாதன் விவகாரம் மேலும் பெரிதாகியுள் ளது. இது அதிமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!