மதுவிற்கு எதிராகப் போராடிய பெண்கள் மீது போலிஸ் தடியடி

சென்னை: தமி­ழ­கத்­தி­லுள்ள தமி­ழக அர­சின் ‘டாஸ்­மாக்’ மதுக் கடை­களை மூடு­வ­தற்கு வலி­யு­றுத்தி ‘மக்கள் அதி­கா­ரம்’ எனும் அமைப்பைச் சேர்ந்த­வர்­கள் தமிழ­கத்தின் பல இடங்களில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். போராட்­டக்­கா­ரர்­கள் மீது காவல்­துறை­யி­னர் கண்­மூ­டித்­த­ன­மாக தடி­யடி நடத்­தி­ய­தில் பெண்­கள் பலர் காய­மடைந்த­னர். காவல்­துறை­யி­னரின் தடியடியால் பல பெண்­களின் மண்டை உடைந்ததாகக் கூறப் படுகிறது. போராட்­டத்­தில் ஈடு­பட்ட பெண்­களைத் தலை முடியைப் பிடித்து காவல்­துறை­யி­னர் இழுத்­துச் சென்ற கொடூ­ர­மும் அரங்­கே­றி­யது. போரா­டிய பெண்­களை ஈவு இரக்­க­மற்ற முறை­யில் தாக்­கிய காவல்­துறை­யி­ன­ருக்­குப் பொது­மக்­கள் கண்ட­னங்களைத் தெரி­வித்து வரு­கின்ற­னர்.

போராட்­டத்­தில் ஈடு­பட்ட சிறு­வன் ஒரு­வன் மீதும் காவல்­துறை­யி­னர் கண் மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். இத்­தாக்­கு­த­லில் நிலை­குலைந்த சிறு­வன் மயங்­கி­யதைக் கண்டு அவ­னது உற­வி­னர்­கள் கத­றி­ய­ழுத சம்ப­வம் பல்­வேறு தரப்­பி­னரை­யும் கொந்த­ளிக்­கச் செய்­துள்­ளது. அச்­சி­று­வன் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளான். போராட்­டத்­தில் ஈடு­பட்ட பெண்­களைக் கைது செய்ய ஆண் காவல்­துறை­யி­னரை ஈடு­படுத்தி தமி­ழக அரசு அநா­க­ரிக செய­லில் ஈடு­பட்­டுள்­ளது பலரை­யும் கொதிப்­படை­யச் செய்­துள்­ளது. பொன்­னேரி அருகே டாஸ்­மாக் கடைக்­குப் பூட்­டுப் போட அந்த அமைப்­பி­னர் முயன்ற­னர்.