அதிமுக, திமுகவுக்கு சீமான் புதுக் கேள்வி

காஞ்சி: சாராய ஆலை களையும் சாராய கடை களையும் அரசு நடத்தும் என்றால் அத்தகைய அரசு மக்களுக்குத் தேவையா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக, திமுக தலைமை யிலான ஆட்சிகள் கல்வியை ஏன் இலவசமாக வழங்கவில்லை என்றும் கேட்டார். “இலவசங்கள் வழங்கி யதை சாதனை என்கிறார் ஜெயலலிதா. “ஆனால் 10 ஆண்டு களில் மட்டும் மது குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்,” என்றார் சீமான்.