அதிமுக தேர்தல் அறிக்கை மிகப்பெரிய நகைச்சுவை: குஷ்பு

சென்னை: அதிமுகவின் தேர் தல் அறிக்கையானது மிகப் பெரிய நகைச்சுவை என்று நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான அவர் நேற்று முன்தினம் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மலிவு விலை சீன கைபேசிகளை கொடுத்து தமி ழக மக்களை ஏமாற்றிவிடலாம் என முதல்வர் ஜெயலலிதா நினைப்பதாக குற்றம்சாட்டினார். “முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று விரும்பி இருந்தால், அவர் முதல்வராகப் பதவியேற்ற உடனேயே அதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் தமது ஆட்சிக் காலத் தில் அவர் ஒன்றுமே செய்யவில்லை. “மாறாக, தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவித்து மக்களை கவர நினைக்கிறார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்காது,” என்றார் குஷ்பு.

மக்கள் நலனை முக்கியம் என திமுக, காங்கிரஸ் கூட் டணி கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலனை மனதில் வைத்துதான் திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவித்தார். “மக்களுக்காகவே பல்வேறு நல்ல திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள் ளன. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதை பார்த்து ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. “உடனே அனைவருக்கும் இலவச கைபேசி அளிப்பதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 350 ரூபாய் மதிப்புள்ள கை பேசிகளை அளித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெய லலிதா,” என்றார் குஷ்பு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகளைக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி.

23 Aug 2019

காங்கிரஸ்: மகளைக் கொன்றவரை நம்பும் சிபிஐ, சிதம்பரத்தை நம்பவில்லை

அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலைக் கட்டுப்படுத்தும் முயற்சி இது. 
“அவரைக் கைது செய்யவேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு விசாரணை அமைப்பின் முன்பும் முன்னிலையாகி பதில் சொல்ல என் தந்தைக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாதபோது கைது ஏன்? சட்டரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளேன்,” என்று கூறினார் கார்த்தி சிதம்பரம். படம்: ஊடகம்

23 Aug 2019

'ப.சிதம்பரம் கைது பழிவாங்கும் நடவடிக்கை'

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். படம்: ஊடகம்

23 Aug 2019

26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் சிதம்பரம்