எளிமையால் மக்களைக் கவரும் வேட்பாளர்

எளிமையான பிரசார நடவடிக்கைகள் மூலம் மக்களைக் கவர்ந்து வருகிறார் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்.பாண்டி. மக்கள் பிரச்சினைகளுக்காக பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் இவர். இவரது எளிமையான பிரசாரம் மக்களைக் கவர்ந்துள்ளது. காலை 6 மணிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு தனக்கு அறிமுகமானவர்களின் வீடுகளுக்குச் செல்கிறார். உடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் நிர்வாகிகள் இருவர் செல்கின்றனர். இவர்கள் தெரிந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் ஐந்து நிமிடங்கள் பேசுகிறார்கள். பிரசாரத்துக்கு இடையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சாலையோரக் கடையில் அமர்ந்து தேநீர் குடிக்கிறார். மதிய உணவாக கட்சியினர் கொடுக்கும் பொட்டல உணவை தெருப் பகுதிகளிலேயே அமர்ந்து சாப்பிடுகிறார் பாண்டி. படம்: தகவல் ஊடகம்