மக்கள் நலக் கூட்டணிக்கு விவசாய சங்கங்கள் கூட்டு இயக்கம் ஆதரவு

சென்னை: மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்பதாக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளின் மொத்தக் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்பதாக கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கிடையே, நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அச்சம்மேளனத்தின் நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.