பொருளியல் பயங்கரவாதம்: இந்தியா முழுதும் 4 பில்லியன் கள்ள ரூபாய் நோட்டுகள்

இந்தியா முழுவதும் 4 பில்லியன் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒவ்வொரு மில்லியன் ரூபாய் நோட்டுகளுக்கும் 250 கள்ள நோட்டுகள் என்ற விகிதத்தில் புழக்கத்தில் இருப்பதாக கள்ளப் பணத்தைக் கண்டறியும் ஆய்வு தெரிவிக்கிறது. நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு 700 பில்லியன் கள்ள ரூபாய் நோட்டுகள் புதிதாக விடப்படுகிறது என்றும் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி மட்டும் குறுக்கிட்டு தடுக்கப்படுகிறது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடு கிறது. கோல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளிவிவரக் கழகம் இந்த ஆய்வை நடத்தியது. இது ஒரு உத்தேச மதிப்பீடுதான் என் றும் கண்டறியப்பட்டதைக் காட்டி லும் அதிகமான கள்ள ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழங்க லாம் என்றும் ஐயம் தெரிவித்துள்ள அந்த ஆய்வு நிறுவனம், இந்தப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்து வதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்குமாறு மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்