வேட்பாளர் மீது திராவகம் வீச்சு

சென்னை: அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் ஆருண் மீது திராவகம் வீசப்பட்டது. நேற்று முன்தினம் காரில் தொகுதிக்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் மீது மர்ம நபர்கள் மூவர் திராவகம் வீசினர். திராவகம் நிரப்பிய முட்டை, கண்ணாடி புட்டிகள் வீசப்பட்டபோது, அசன் ஆரூண் காருக்குள் அமர்ந்திருந்தார். கார் கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் சிறிதளவு திராவகம் மட்டுமே அவர் மீது பட்டது. இதனால் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து தப்பியோடிய மூவருக்கும் போலிசார் வலைவீசியுள்ளனர்.