தமிழகத் தேர்தல்: வாக்களிக்கப் பணம் பெற்றதாக ஒருவர் கைது; 250 பேருக்கு போலிஸ் அழைப்பாணை

தேர்தலில் வாக்களிக்கப் பணம் கொடுப்பதும் குற்றம், பணம் வாங் குவதும் குற்றம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதற்காகத் தமிழகத் தேர்தல் ஆணையம் பல புதிய உத்திகளைப் பயன்படுத்தி பிரசாரம் செய்து வருகிறது. இருப்பினும், வாக்காளர்களுக் குப் பணம் தர முயன்றதாகக் கூறி கட்சிகளின் பிரதிநிதிகள் கைதாவது தொடர்கிறது. இந்த நிலையில், வாக்களிக்கப் பணம் பெற்றதாகக் கூறி பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம் பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது. இப்படி வாக்களிக்கப் பணம் பெற் றதாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை எனச் சொல்லப்படுகிறது.

நாளை தேர்தல் நாள் என்பதால் பணப் பட்டுவாடாவைக் கட்சியினர் முடுக்கிவிட்டுள்ள நிலையில் இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத் தில் 146 புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து வாக் காளர்களுக்குப் பணம் தர முயன்ற தாகக் கூறி அதிமுகவைச் சேர்ந்த 13 பேர் உட்பட 21 பேரை மதுரை போலிஸ் கைது செய்தது. அவர்களிடம் இருந்த வாக் காளர் பட்டியல், நோட்டுப் புத்தகங் கள் ஆகியவற்றைச் சோதனை யிட்டபோது பணம் பெற்றவர்களின் விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்றது தொடர் பில் விளக்கம் அளிக்கக் கோரி 250 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!