தென்காசி தொகுதி மறுவாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

நெல்லை: தென்காசி தொகுதிக்குட்பட்ட 56வது வாக்குச்சாவடியில் நேற்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் மாலை 2 மணியளவில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குச்சாவடியில் தேர்தலுக்கு முன்னர் வாக்குப்பதிவு ஒத் திகை நடத்தப்பட்டது. அப்போது பதிவான 52 வாக்குகளை நீக்காமலேயே 16ஆம் தேதியன்று அசல் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்திவிட்டனர்.

இதுகுறித்து தெரியவந்ததும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமாகா வேட்பாளர், அதிமுக முகவர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதையேற்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உடனடியாக உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு துவங் கியது. மாலை 6 மணிவரை நடந்த வாக்குப்பதிவில் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து இந்த வாக்குகளும் இன்றே எண்ணப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!