யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இம்முறை யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என தந்தி தொலைக்காட்சி கூறியுள்ளது. வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ள அத்தொலைக்காட்சி, தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அதிமுக 111 இடங்களையும் திமுக 99 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. மக்கள் நலக்கூட்டணிக்கு 3, பாமகவுக்கு 2 இடங்களும் பாஜகவுக்கு ஓரிடமும் கிடைக்கும் என்றும் அத்தொலைக்காட்சி மேலும் தெரிவித்துள்ளது. இக்கருத்துக்கணிப்பு அதிமுக தரப்பை உற்சாகமடைய வைத்துள்ளது.