அதிமுக ஆட்சி அமைய காரணமான வைகோ: ஊடகங்கள் விமர்சனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலர் வைகோ மேற்கொண்ட முயற்சிகளே மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கான முக்கிய காரணமாகிவிட்டது என அரசியல் நோக்கர்கள் கருதுவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியதால் வைகோ மறைமுகமாக அதிமுகவுக்கு உதவிய தாக அரசியல் நோக்கர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இம்முறை தேமுதிகவை எப்படியேனும் தங்களது கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திமுக தலைமை பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டது.

நிச்சயமாக அதிமுக பக்கம் விஜயகாந்த் செல்ல மாட்டார் என்பதால், இறுதிக் கட்டத்திலேனும் விஜயகாந்த் தங்கள் பக்கம் வருவார் என திமுக தலைவர் கருணாநிதி எதிர்பார்த்திருந்தார். விஜயகாந்தை தங்கள் வசம் இழுப்பதற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முயற்சித்தன. ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக திடீரென மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி அதில் தேமுதிகவையும் தமாகாவையும் இணைத்து பெரிய அணி உருவானதாக அறிவித்தார்

வைகோ. தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது போன்ற தோற்றத்தையும் அவர் முனைப்புடன் உருவாக்கினார். ஆனால் அரசியல் கவனிப்பா ளர்களோ, மக்கள் நலக் கூட்டணியால் வாக்குகள் மட்டுமே பிரியும் என்றும், அது அதிமுக வுக்கு ஆதாயமாக அமையும் என்றும் தொடக்கம் முதலே கூறி வந்தனர். மேலும் மக்கள் நலக் கூட்டணி என்பது, அதிமுகவின் கிளைக்கட்சி என்கிற அளவிலும் கூட விமர்சிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!