நமக்கு நாமே நடந்த தூரம் போதவில்லை, கவரவில்லை

தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்த மாதம் 16ஆம் தேதி நடந்தது என்றாலும் அதற்கு ஏறக்குறைய 18 மாதங்களுக்கு முன்பே திமுக 'நமக்கு நாமே' என்ற ராஜதந்திரத்தை வகுத்து திமுகவின் நம்பிக்கை நட்சத்திர மான ஸ்டாலினை அந்தத் தந்திரத்தின் கதாநாயகனாக களத்தில் இறக்கியது. ஸ்டாலின் நடந்தும், இதர வகைகளிலும் மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென் றார். பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தார். குறைகளை எல்லாம் கேட்டறிந்தார். மக்கள் தெரிவித்த கருத்துகள், யோச னைகள், எண்ணங்கள் எல்லா வற்றையும் தொகுத்து திமுக தலைமைபீடம் தேர்தல் கொள்கை அறிக்கையை உரு வாக்கியது.

"இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்கள் எல்லாரும் ஸ்டாலினைப் போல் உழைக்க வேண்டும்," என்று கட்சியின் தலைவர் கருணாநிதி கட்டளை பிறப்பிக்கும் அள விற்கு ஸ்டாலின் அரும்பாடு பட்டார். ஆனாலும் தேர்தல் முடிவு களைப் பார்க்கையில் அவர் நடந்து சென்ற தூரம் போதாது என்பதும் எல்லைக் கோட்டைத் தொடும்போது அவர் கோட்டை விட்டுவிட்டார் என்பதும் தெரிய வருகிறது. இந்தத் தேர்தலில் திமுக ஏறக்குறைய 100 தொகுதி களைக் கைப்பற்றியிருந்தாலும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கைக்கு எட்டவில்லை. இருந்தாலும் சட்டமன்றத்தில் முக்கியமான எதிர்க்கட்சியாக திமுகவை 'நமக்கு நாமே' உருவாக்கி இருக்கிறது.

'நமக்கு நாமே' ராஜதந்திரத்தின் கதாநாயகன் ஸ்டாலின் பல தரப்பு மக்களையும் சந்தித்தார். கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!