இந்திய நகரில் வரலாறு காணாத வெயில்

புதுடெல்லி: வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலோடி என்ற நகரத்தில் வரலாறு காணாத வெப்ப நிலை எட்டி உள்ளது. வறட்சி மிகுந்த பாலை நிலமான ராஜஸ்தானின் அந்த நகரத்தில் வெப்பநிலை 51 டிகிரி செல்சியஸாகப் பதிவானது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. இதற்கு முன்னர் 1956 ஆம் ஆண்டில் 50.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு ஆனது.

வட இந்தியாவில் வெப்ப நிலை, மே, ஜூன் மாதங்களில் 40 டிகிரி செல்சியஸாக இருப்பது வழக்கம். ஆனால் அது 50 டிகிரியைத் தாண்டுவது அரிதான ஒன்று. இந்த வார இறுதியில் இந்தியாவின் வடக்கு, மேற்கு வட்டாரங்களில் கடுமையான வெப்ப நிலைப் பாதிப்பு இருக்கக் கூடும் என்று அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, புயல் காரண மாக இந்தியாவின் ஒடிசா, ஆந் திராவில் மழை பெய்தது. வங்காள தேசத்தை நோக்கி புயல் செல்கிறது என்று தெரி விக்கப்பட்டது. ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக அளவு மழை பெய்யும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!