தேர்தல் ஒத்திவைப்பை ஏற்க இயலாது: கனிமொழி

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதை ஏற்க இயலாது என திமுக மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதில் அரசியல் பின் னணி இருப்பதாகவும் அவர் சாடி உள்ளார். “தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது சரியல்ல. இதனை திமுக சட்ட ரீதியாக சந்தித்து வருகிறது. நிச்சயமாக நியாயம் வழங்கப்படும் என்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டு இருக்கிறோம்,” என்றார் கனிமொழி.

தேர்தல் ஒத்தி வைப்பு தொடர் பில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் கருணாநிதி தனது கருத்தை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறியிருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக திமுக சட்ட ரீதியில் போராடுவதாகத் தெரிவித்தார். “தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் நாங்கள் வழக்காடி வருகிறோம். நிச்சயமாக நியாயம் கிடைக்கும்,” என்று கனிமொழி மேலும் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது