மோசமான வானிலை: அந்தமானில் தரை இறங்க முடியாமல் திரும்பி வந்த விமானம்

ஆலந்தூர்: அந்தமானில் பலத்த மழை பெய்ததால் 178 பயணி களுடன் சென்ற சென்னை விமானம் நேற்று முன்தினம் தரை இறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து 178 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை விமானம் ஒன்று அந்தமானுக்குப் புறப்பட்டுச் சென் றது. அந்தமானைச் சென்றடைந்த தும் விமானம் தரை இறங்க முயன்றது. ஆனால் அங்கு பலத்த மழை பெய்ததால் விமானம் தரை இறங்க முடியவில்லை. இதனையடுத்து விமானத்தை தரை இறக்க அந்தமான் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் அந்தமானிலிருந்து சென்னைக்கு விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை விமானம் திரும்பி வந்ததும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஓட்டல் களில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் நேற்று விமானம் மூலமாக அந்த மானுக்கு அனுப்பி வைக்க ஏற் பாடுகள் செய்யப்பட்டன. அந்தமான் வரை சென்று மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்ததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் நேற்றுக் காலை 6.40 மணியளவில் தனி யார் விமானம் ஒன்று 117 பயணி களுடன் மும்பைக்குக் கிளம்பி யது. புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் எந்திரத்தில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் அவ சரமாக சென்னை விமான நிலை யத்தில் தரையிறக்கப்பட்டது.