தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பால கிருஷ்ண ரெட்டி தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் என ஊடகத் தகவல்கள் தெரி விக்கின்றன. இம்முறை அவர் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதிமுக பலவீனமாக உள்ள தொகுதி களில் ஓசூரும் ஒன்று. இந் நிலையில் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவி பரி சாகக் கிடைத்துள்ளது. நேற்று அவர் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவ ருக்கு கால்நடை பராமரிப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் ஓசூர் நகராட்சித் தலைவராகப் பதவி வகித்துள்ளார். தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாத தால், தொகுதியில் மேற் கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது அவர் தெலுங்கிலேயே பேசி வாக்குகள் சேகரித்தார்.

எனினும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிற கும் தமிழ் கற்காமல் போனால் துறை ரீதியிலான பணிகளைக் கவனிக்க இயலாது என்றும் மிக விரைவில் கற்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை பாலகிருஷ்ண ரெட்டிக்கு அறிவு றுத்தி இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓசூர் நகராட்சித் தலைவராக இருந்தபோது, தமிழ் தெரியாத தால், அதிமுக கவுன்சிலர்கள் சிலரே நகராட்சி நிர்வாகத்தை கவனித்ததாக முன்பு சர்ச்சை எழுந்தது. சில கவுன்சிலர்கள் தங்க ளுக்கு வசதியாக சில தீர்மா னங்களை தமிழிலேயே தயா ரித்து, அவற்றை பாலகிருஷ்ண ரெட்டி மூலம் நிறைவேற்றியதாக வும் ஊடகங்களில் செய்தி வெளியானது. எனவே அமைச்சர் பொறுப் பேற்ற பிறகு இத்தகைய சர்ச்சை கள் எழக்கூடாது என்பதற்காக இப்போதே பாலகிருஷ்ண ரெட்டி தமிழ் கற்கத் தொடங்கிவிட்ட தாகக் கூறப்படுகிறது.