தமிழகத்துடன் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்து டன் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்றும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் நிபுணர் குழு கூறியுள்ளதை புறம்தள்ள முடி யாது என்றார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள, தமிழக அரசுகள் இடையே மோதல் நிலவி வருகிறது. அணையில் அதிகளவு தண் ணீரைத் தேக்கி வைக்க தமிழகம் வலியுறுத்தி வரும் நிலையில், அதை எதிர்த்து வந்த முந்தைய கேரள அரசு புதிய அணை கட்டப் போவதாக அறிவித்தது.

இத்தகைய சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அவரது இக்கருத்து கேரளா வில் மட்டுமல்லாமல் தமிழகத்தி லும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைமையி லான முந்தைய கேரள அரசு, முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார் அம்மாநிலத்தின் புதிய முதல்வர்.

“பாதுகாப்பு குறித்த அம்சங் களாலேயே பிரச்சினை உருவா னது. அதன் அடிப்படையில்தான் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் அறிக்கை அளித்துள்ளனர். அதில் அணை பாதுகாப்பாக, பலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதை நாம் புறக்கணிக்க முடியாது. அதைச் சந்தேகப்படவும் முடியாது. அதற் கான அவசியமோ, தேவையோ எழவில்லை,” என்றார் பினராயி விஜயன். அணையின் பலத்தைப் பாது காக்கத் தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளதாக நிபு ணர் குழு கூறியதைச் சுட்டிக் காட்டிய அவர், அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்