தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய விவகாரம்: ஆளுநர் ரோசய்யா விளக்கம்

சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர் பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது ஏன்? என்பது குறித்து தமிழக ஆளுநர் ரோசய்யா விளக்கம் அளித் துள்ளார். இது தொடர்பாக செய்தியா ளர்களிடம் பேசிய அவர், தேர் தலை நடத்தக் கோரி தமக்கு கோரிக்கைகள் வந்ததாலேயே, அவ்வாறு கடிதம் எழுதியதாகத் தெரிவித்தார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பரவலாக வாக்காளர்களுக்குப் பணப்பட்டு வாடா நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அத்தொகுதி களுக்கான தேர்தலை காலவரை யின்றி ஒத்தி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதிக்குள் அவ்விரு தொகுதி களின் தேர்தலை நடத்த வேண் டும் என தேர்தல் ஆணை யத்துக்கு ஆளுநர் ரோசய்யா கடிதம் எழுதினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவரது இக்கோரிக் கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், இவ்வாறு கடிதம் எழுதுவதை ஆளுநர் ரோசய்யா தவிர்த்து இருக்கலாம் என அதிருப்தி வெளியிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது