ரத்தம் ஏற்றிய 2,234 பேருக்கு எச்ஐவி கிருமி தொற்றியது

புதுடெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 18 மாதங்களில் மட்டும் பாதுகாப்பற்ற முறையில் பரி சோதனை செய்யப்படாத ரத்தத்தை நோயாளிகள் உடலில் செலுத்திய தன் காரணமாக சுமார் 2,234 பேர் எச்ஐவி கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சேத்தன் கோத்தாரி, ரத்தம் ஏற்றியதால் எச்ஐவி கிரு மித் தொற்று ஏற்பட்டவர்களின் புள்ளி விவரங்களை அளிக்குமாறு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார்.

அந்த அமைப்பு அளித்துள்ள இந்தப் புள்ளி விவரங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. எச்ஐவி கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாநிலத்தை அடுத்து குஜராத் 292, மகாராஷ்டிரா 276, டெல்லி 264, மேற்கு வங்கம் 135, கர்நாடகா 127, பீகார் 91, தமிழகம் 89, பஞ்சாப் 88, சத்தீஸ்கர் 69, ஒடிசா 55, ராஜஸ்தான் 55, ஆந்திரா 43, தெலுங்கானா 42, கேரளா 29, சண்டிகார் 19, ஜார்க்கண்ட் 17, மணிப்பூர் 17, உத்தரகாண்ட் 16, மத்தியப் பிரதேசம் 14, ஜம்மு=-காஷ்மீர் 14, அசாம் 8, மிசோரம் 4, நாகலாந்து 4, டையூ டாமன் 3, கோவா 2, புதுச்சேரி 1 என ஆகமொத்தமாக 2,234 பேருக்கு ரத்தம் ஏற்றியதால் எச்ஐவி கிருமி தொற்றியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!