திருமா: வழக்கு தொடுப்பேன்

அரியலூர்: "காட்டுமன்னார் கோயில் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையைத் திரும்ப நடத்த வலியுறுத்தி இவ்வாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன்," என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திரு மாவளவன் தெரிவித்தார். அரியலூர் அங்கனூரில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமி ழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து வங்கிகளிலும் விவ சாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்," என்றார்.

"நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். வேட் பாளர்கள் வீதிவீதியாகச்சென்று பிரசாரம் செய்வதைத் தடை செய்ய வேண்டும். இதனால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க முடியும். "தமிழக அரசியலில் திமுக= அதிமுக இணக்கமான நாகரீக மான மாற்றம் ஏற்பட எங்களது கூட்டணி முக்கிய காரணமாகும். அவர்கள் நட்புறவாக இயங்கு வதை வரவேற்கிறோம். உள் ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவையற்றது. எங்கள் கூட்டணி தொடர்ந்து செயல்படும்," என்று திருமாவளவன் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!