150 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரம்: கமுதி அருகே நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 150 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள வேப்பங்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார் ரகசிய போலிஸ் பிரிவைச் சேர்ந்த காவலரான முனீஸ். வழியில் கஞ்சா வாடை அடித்ததால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதியில் சோதனையிட்டபோது 72 உறைகளில் கஞ்சா புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலிசார் அவற்றைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் கமுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.