களையெடுப்பு: திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

சென்னை: அதிமுக வழியைப் பின்பற்றி திமுகவும் முக்கிய நிர்வாகிகள் பலரை அதிரடியாக மாற்ற முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தி லேயே மாவட்ட செயலர்கள் பலரை மாற்ற திமுக தலைவர் கருணாநிதி விரும்பியதாகக் கூறப்பட்டது.

எனினும் தனக்கு ஆதரவாக உள்ள பெரும்பாலான மாவட்ட செயலர்களை மாற்றக் கூடாது என கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிடிவாதமாக இருந்ததால், அந்த நடவடிக்கையை சட்டப்பேரவைத் தேர்தல் வரை ஒத்தி வைத்திருந்தார் கருணாநிதி.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை. எனினும் சட்டப்பேரவை வரலாற்றிலேயே இல்லாத வகையில் அதிகமான உறுப்பினர்களுடன் கூடிய பேரவை எதிர்க்கட்சியாக உருவெ டுத்துள்ளது திமுக.

இந்நிலையில் பல மாவட்ட செயலர்கள் தேர்தல் நேரத்தில் உள்குத்து வேலைகளில் ஈடுபட்ட தாகவும், இதனால் தான் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பல திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைய நேரிட்டதாகவும் திமுக தலைமைக்கு பல்வேறு மட்டங்க ளில் இருந்தும் புகார்கள் வந்துள் ளன. குறிப்பாக தென் மாவட்ட கட்சி நிர்வாகிகள் மீதே அதிகமான புகார்கள் குவிந்திருப்பதாகத் தெரிகிறது.

சில மாவட்ட செயலர்கள் கட்சித் தலைமை தேர்தல் செலவுக்காக கொடுத்த தொகையைக் கூட முறையாகச் செலவிடவில்லை என சில வேட்பாளர்களும் திமுக தலைவ ரிடம் வெளிப்படையாக புகார் அளித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அறிவாலயத்தில் குவிந்திருக்கும் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டிருக்கும் கருணாநிதி, விரைவில், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறார். இதனால், அதிமுகவைப் போலவே திமுகவிலும் மிக விரைவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என தமிழக ஊடகங்கள் கூறியுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!