மாணவியின் பேச்சு; கண் கலங்கிய குஜராத் முதல்வர்

காந்திநகர்: பெண் சிசுக்கொலை பற்றிய நான்காம் வகுப்பு மாணவி யின் பேச்சை கேட்டுக் கூடி இருந்த பொதுமக்கள் மட்டு மின்றி, விழாவுக்குத் தலைமை யேற்ற குஜராத் முதலவர் ஆனந்தி பென்னும் கண் கலங்கினார். குஜராத்தின் ஹீரஞ்ச் என்ற கிராமத்தில் பள்ளி குழந்தைகளுக் கான நலத்திட்ட உதவி விழா நிகழ்ச்சியில் நான்காம் வகுப்பு மாணவி அம்பிகா கோயல், பெண் சிசுக் கொலை குறித்து உரை யாற்றினார். கருக்கலைப்புக்கு உள்ளான ஒரு பெண் குழந்தை, தனது தாய்க்கு எழுதிய கடிதம் என்ப தாகக் கூறி கற்பனையின் மூலம் வடித்த ஒரு கடிதத்தை அந்தச் சிறுமி வாசித்தாள்.

"இந்த உலகத்தைப் பார்க்க தான் எப்படியெல்லாம் ஆசைப்பட் டேன் என்றும் உலக காற்றைச் சுவாசிக்க ஏங்கிய, என்னை பெண் குழந்தை என்று தெரிந்து கொண்டதால் கொன்றுவிட்டீர் களே," என்று அந்தக் கடிதம் மேலும் நீண்டபோது கூட்டத்தில் இருந்த பலரும் உணர்ச்சி மிகுதி யால் கண்ணீர் வடித்தனர். முதல்வர் ஆனந்தி பென்னும் இதைக் கேட்டுக் கண்ணீர் மல்கி னார். பேசி முடித்ததும் அம்பி காவை தனது அருகே கூப்பிட்ட அவர், அச்சிறுமியை கட்டி அணைத்து முத்தமிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மாணவ, மாணவி களுக்குச் சமூகத்தில் இப்போது உள்ள பிரச்சினைகள் குறித்த தெளிவை ஏற்படுத்த ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்றார்.

மாணவி அம்பிகா கோயலை கட்டித் தழுவிய குஜராத் முதல்வர் ஆனந்தி பென். படங்கள்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!