தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டம்: காங்கிரஸ் ஆலோசனை

சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு செயல்பட்டதா என்பதே புரியவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தயங்காது என்றார். இதையடுத்து போராட்டம் நடத்துவது குறித்து சத்தியமூர்த்திபவனில் நேற்று முன்தினம் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் இளங்கோவன் ஆலோசனை நடத்தினார்.

இதில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்புவும் கலந்து கொண்டார். அப்போது போராட்டத்துக்கான தேதி, எந்தெந்த மாவட்டங்களில் நடத்துவது என்பது குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. மிக விரைவில் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது