குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலமாக தமிழகம்

சென்னை: தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தைப் பருவமானது துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் இனிய பருவம் என்று கூறியுள்ளார். "குழந்தைப் பருவத்தில், குழந்தைத் தொழிலாளர் என்ற கொடுமைக்கு ஆட்படுத்தப்படும் எந்த ஒரு குழந்தையையும் விடுவித்து அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும் முறையான கல்வியினையும் வழங்கிட வேண்டியது நம் அனைவரின் கடமை.

"தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில், குழந்தைத் தொழிலாளர் களை மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி அளித்தல், குழந்தைகள் தரமான கல்வி கற்றிடவும் பெற்றோர்களின் சுமை களைக் குறைத்திடவும் கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, சீருடைகள், சத்தான மதிய உணவு, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், மடிக்கணி னிகள் என எண்ணற்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன," என்று முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் மேலும் பல புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!