சிலைகளை அடையாளம் காணும் பணி தீவிரம்

சென்னை: சிலை கடத்தல் தொடர்பில் சரண் அடைந்துள்ள தீன தயாளனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 285 சிலைகளையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினரும் இந்து அற நிலையத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் காணாமல் போன சிலைகளை அடையாளம் காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கோயில் நிர்வாகிகள், பூசாரிகளும் தீனத யாளன் வீட்டுக்கு வந்துள்ளனர். சேலம், திருச்சி, புதுக் கோட்டை, திருக்கோயிலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கோயில்களின் பெயர் மற்றும் காணாமல் போன சிலைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறி காவல்துறையினரிடம் பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை மஞ்சக்குடியில் உள்ள விசுவநாதர் சாமி கோயிலில் 10 சிலைகள் காணாமல் போயிருப்பதாக அங்கிருந்து வந்தவர்கள் தெரிவித்தனர். புதுக்கோட்டை அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியனார் சிலை ஒன்றும் கரூர் கிருஷ்ணாபுரம் அம்மன் கோயிலில் பிடாரி சிலை ஒன்றும் புதுக்கோட்டை கஞ்சனூர் அகஸ்தீஸ்வரர் கோயிலில் ஒரு சிலையும் காணாமல் போயுள்ளது. இக்கோவிலின் நிர்வாகிகளும் தீனதயாளனின் வீட்டுக்கு வந் திருந்தனர். இதனால் தீன தயாளன் வீடு இருக்கும் முர்ரேஸ் கேட் சாலை பகுதி நேற்றுக் காலை பரபரப்பாக காணப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் 3 இடங்களில் 285 சிலைகளை பதுக்கி வைத்திருந்த சிலை கடத்தல் மன்னன் தீன தயாளன் கடந்த மாதம் 31ஆம் தேதி ஐ.ஜி. பொன்மாணிக்க வேலிடம் சரண் அடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

சென்னை தீனதயாளன் வீட்டில் குவிந்த பூசாரிகளில் சிலர். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!