ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது; டெல்லியில் நெருக்கடி நிலை!

இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லியை ஆளும் ஆம் ஆத்மி கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் மொக­னியா செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் உரை­யாற்­றிக் கொண்­டி­ருந்த­போது திடீ­ரென அங்கு வந்த போலி­சார் அவரைக் கைது செய்­வ­தாகக் கூறி இழுத்­துச் சென்ற­னர் (படம்). இதனால் டெல்­லி­யின் முதல்­வர் கெஜ்­ரி­வால் டெல்லியில் மோடி நெருக்­கடி நிலையை அறி­வித்திருப்ப­தாக தனது டுவிட்­ட­ரில் தெரி­வித்­துள்­ளார்.

தண்­ணீர்ப் பிரச்­சினை பற்றி புகார் கொடுக்க குழு­வாக வந்த பெண்­களி­டம் தவ­றாக நடந்­து­கொண்ட­தா­க­வும் தகாத வார்த்தை­க­ளால் பேசி­ய­தா­க­வும் வந்த புகா­ரின் அடிப்­படை­யில் அவர் கைது செய்­யப்­பட்­ட­தாக போலிஸ் தரப்­பில் கூறப்­பட்­டது. எம்எல்ஏ தினே‌ஷின் பிணை மனுவை டெல்லி நீதி­மன்றம் தள்­ளு­படி செய்து திங்கட்­கி­ழமை வரை அவரை நீதி­மன்றக் காவ­லில் வைக்­கும்படி உத்­த­ர­விட்­டுள்­ ளது. டெல்லி நீர் வாரி­யத்­தின் துணைத் தலை­வ­ரான திரு மொக­னியா இந்தக் குற்­றச்­சாட்டை மறுத்­துள்­ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்