பொது இடத்தில் மனைவியை அடித்து உதைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

பெங்க­ளூரு: பொது இடத்தில் பலர் பார்க்க, மனை­வியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒரு­வர் அடித்­து உதைத்தது பெரும் பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யுள்­ளது. கர்­நா­ட­கா மாநிலத்தில் சித்­த­ராமையா தலைமை­யி­லான காங்­கி­ரஸ் ஆட்சி நடக்­கிறது. இந்த மாநி­லத்­தில் உள்ள பார­திய ஜனதா கட்­சியைச் சேர்ந்த குமா­ர­சாமி, முடி­கிரே தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த­வர். இவ­ரது மனைவி சவிதா, மாநில அர­சில் உத­விப் பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்றி வரு­கிறார்.

ஹாசனை சேர்ந்த பெண் ஒரு­வ­ரு­டன் குமா­ர­சா­மிக்கு நெருங்­கிய தொடர்பு உள்­ளது. இரு­வ­ருக்­கும் இடையே நடந்த உரை­யா­டல் பதிவு செய்­யப்­பட்ட 'சிடி' ஒன்று, கடந்த ஆறு மாதங் களுக்கு முன் வெளி­யா­னது. இதனால் கோபம் அடைந்த சவிதா, கண­வனை விட்­டுப் பிரிந்தார். குமா­ர­சா­மி­யும் பெங்க­ளூ­ரில் எம்.எல்.ஏ.க்களுக்­கான விடு­தி­யில் கடந்த ஆறு மாதங்களாக தங்­கி­யுள்­ளார். இந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம், குமா­ர­சாமி தங்­கி­யுள்ள விருந்­தி­னர் மாளிகைக்கு மனைவி சவிதா வந்தார். அவ­ரு­டன் அவ­ரது குடும்பத்­தி­ன­ரும் காவல்­துறை­யி­ன­ரும் வந்­தி­ருந்த­னர்.

மனை­வியைப் பார்த்த குமா­ர­சாமி அவ­ரு­டன் பேசு­வதைத் தவிர்த்து காரை நோக்கிச் சென்றார். இதை பார்த்த சவிதா வேக­மாக சென்று காரில் இருந்த சாவியை எடுத்­துக் கொண்டார். இதை­ய­டுத்­து ஆத்திரமடைந்த குமா­ர­சாமி, பொது இடத்தில் சவிதாவை சரமாரியாக அடித்து உதைத்தார். காவல்­துறை­யி­னர் தடுத்து நிறுத்தி இரு­வரை­யும் பிரித்­த­னர். பின்னர், இரு­வரை­யும் காவல் நிலை­யத்­துக்­குக் கொண்டு சென்ற­னர். அங்­கும் ஆத்திரம் தீர மனை­வியை குமா­ர­சாமி அடித்­துள்­ளார். இதை­ய­டுத்து, ஆத்­தி­ர­மடைந்த சவி­தா­வின் குடும்பத்­தி­னர் குமா­ர­சாமி மீது நட­வ­டிக்கை எடுக்­கக் கோரி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அவர்­களை காவல்­துறை­யி­னர் சமா­தா­னப்­படுத்­தி­ அனுப்பி வைத்தனர்.

இது பற்றி சவிதா கூறுகை­யில், "இது எங்களின் குடும்ப விவ­கா­ரம்; கண­வன் மீது புகார் கொடுக்க விரும்ப­வில்லை. பிரச்­சினையைப் பேசி தீர்த்­துக் கொள்­வோம். "என் கண­வ­னி­டம் இருந்து வில­கு­மாறு, அந்தப் பெண்ணை எச்­ச­ரிக்­கவே கண­வனைப் பார்க்க வந்­தேன்," என்றார். ஆனால், குமாரசாமி, எது­வும் தெரி­விக்க மறுத்து விட்­டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!