முதல்வருக்கு முத்தம் தந்த இளம்பெண்

பெங்களூரு: பெங்களூரு வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர், கர்நாடக முதலமைச் சருக்கு முத்தம் கொடுத்த காணொளியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. குரூபா சமுதாய மக்களின் மாநில அளவிலான நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற் றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார். அப்போது, முதலமைச்சர் சித்தராமையா அருகில் நின்றிருந்த இளம்பெண், யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சருக்கு முத்தம் (படம்) கொடுத்தார். அந்த முத்தத்தை நிராகரிக்காமல் சித்தராமையா புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

முத்தம் கொடுத்த பெண், மகிழ்ச்சியுடன் மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். இதைக் கவனித்த மற்றவர்கள், சற்றே அதிர்ச்சி அடைந்தனர். முதல்வருக்கு பெண் முத்தம் கொடுத்த விவகாரம் கன்னட தொலைக்காட்சி செய்தி களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சித்தராமையா, ''எனக்கு முத்தம் கொடுத்த பெண் என் மகளுக்கு சமமானவர். இதற்கு வேறு அர்த்தம் எதுவும் கற்பிக்கவேண்டாம்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!