அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதியம் உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறு பவர்களுக்கு 23.6% சம்பள உயர்வு வழங்க மோடி அரசாங்கம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்து ரையின்படி மத்திய அரசு ஊழியர் களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.250,000 ஆகவும் இருக்கும். புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. முன்னாள், இப்போதைய மத்திய அரசாங்க ஊழியர்களின் சம்பள மும் ஓய்வூதியமும் கிட்டத்தட்ட 24% உயர்கிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட் டத்தில் இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் 10 மில்லியன் அரசாங்க ஊழியர்கள் பயன் பெற உள்ளனர். இவர்களில் 60 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் அடங்குவர். சம்பளமும் படித்தொகையும் 23.6 விழுக்காடாகவும் ஓய்வூதியம் 24 விழுக்காடாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளன.

ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால் மத்திய அர சுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7%. ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக் கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமை யிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படை யில் நிதி அமைச்சகம் அமைச் சரவை குறிப்பைத் தயார் செய்தது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந் துரைகளை அமல்படுத்துவதற்கு நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசுப் பணியில் சேரும் அறிமுக ஆரம்ப நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000ல் இருந்து ரூ.18,000-ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும், அமைச்சரவை செய லரின் அதிகபட்ச மாத ஊதியம் இப்போதைய 90,000 ரூபாயில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் கேட்ட அளவிற்கு மத்திய அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. விலைவாசி உயர்விற்கு ஏற்றவாறு சம்பளம் உயர்த்தப்படவில்லை. ஆரம்ப சம்பளம் ரூ.23,000 ஆக இருக்கவேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் ரூ. 18,000 ஆக மட்டுமே மத்திய அரசு உயர்த்தி உள்ளது. "இதனால் சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை. இத னால் விரைவில் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளோம்," எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!