திருவாரூர் மாவட்டத்தில் சோழர்கால சமணர் சிற்பம்

முத்­­­துப்­­­பேட்டை: திரு­வா­ரூர் மாவட்­டம், முத்­­­துப்­­­பேட்டை அருகே தில்லை­­­வி­­­ளா­­­கத்­­­தில் பிற்­­­கால சோழர் காலத்தைச் சேர்ந்த சம­­­ணர் சிற்­­­பம் கண்­­­டெ­­­டுக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது. தில்லை­­­வி­­­ளா­­­கத்­­­தில் பழமை­­­யான பெரிய அய்­­­யனார் கோயில் உள்­­­ளது. இந்தக் கோயில் குட முழுக்கு கடந்தாண்டு நடந்தது. இதற்­­­காக திருப்­­­பணி செய்­­­த­­­போது கோயில் அருகே சிதைந்த நிலை­­­யில் சிறிய சிலை ஒன்று கண்­­­டெ­­­டுக்­­­கப்­­­பட்­­­டது. இந்தக் கற்­­­சிலை குறித்­­­து தொல்­­­லி­­­யல்­­­துறை ஆய்­­­வா­­­ளர் மன்னை பிர­­­காஷ் நேற்று முன் தினம் ஆய்வு செய்­­­தார். அதில் தற்­­­போது கிடைத்­­­துள்ள சம­­­ணர் சிற்­­­பம் 23 சென்டி மீட்டர் நீளம், 20 செ.மீ. அக­­­லம் உள்­­­ளது.

படைப்­­­புச் சிற்­­­ப­­­மாக செதுக்­­­கப்­­­பட்­­­டுள்ள இச்­­­சிலை 11 மற்­­­றும் 12 ஆம் நூற்­­­றாண்டைச் சேர்ந்தது. பிற்­­­கால சோழர்­­­கா­­­லத்தைச் சேர்ந்த­­­தா­கக் கரு­­­தப்­­­படும் இச்­­­ச­­­ம­­­ணர் வடி­­­வம் பீடத்­­­தில் தியான கோலத்­­­தில் அமர்ந்த­­­வாறு உள்­­­ளது. தலைப்­ப­கு­­­தி­­­யில் முக்­­­குடை­­­யும் அரை நீள்­­­வட்ட திரு­வாசி (சிலை­யின் பீடத்தை அலங்க­ரிக்­கும் உலோ­கத்­தி­லான வேலைப்­பாடு) காணப்­­­படு­­­கிறது. சம­­­ண­­­ரின் இரு­­­பு­­­ற­­­மும் யட்­­­சன், யட்­­­சி­­­கள் சாம­­­ரம் வீசு­­­கின்ற­­­னர். கால், கைகளில் தசை திட்டு, மடிப்­­­பு­­­கள் உள்­­­ளன. சிலை­­­யின் தலைப் பகு­­­தி­­­யோடு முக்­­­குடை சேர்ந்­­­தி­­­ருப்­­­பது தனிச் சிறப்­­­பா­­­கும். ஆனா­­­லும் சிலை­­­யின் முகப்ப­­­குதி சிதி­­­ல­­­மடைந்­­­துள்­­­ளது. திருத்­­­துறைப்­­­பூண்டி தாலுகா பகு­­­தி­­­யில் திருத்­­­துறைப்­­­பூண்டி, தோலி, வேம்ப­­­ழ­­­கன்காடு பகு­­­தி­­­களில் ஏற்­­­கெ­­­னவே 3 சம­­­ணர் சிற்­­­பங்கள் கிடைத்­­­துள்­­­ளன. தற்­­­போது தில்லை­­­வி­­­ளா­­­கத்­­­தில் கிடைத்­துள்ள இந்த 4வது சிலை உரு­­­வத்­­­தில் மிக சிறி­­­ய­­­தா­­­கும்.

திருத்­­­துறைப்­­­பூண்டி அருகே பள்­­­ளங்­­­கோ­­­யி­­­லில் நடந்த தொல்­­­லி­­­யல் ஆய்­­­வில் ஏற்­­­கெ­­­னவே சம­­­ணர்­­­கள் குறித்த செப்­­­பே­­­டு­­­கள் கிடைத்­­­துள்­­­ளன. இப்­­­ப­­­கு­­­தி­­­யில் சம­­­ணர்­­­கள் அதி­­­க­­­ள­­­வில் வாழ்ந்­துள்­ளதற் கான ஆதாரங்கள் கிட்டியுள் ளன. சமண கல்­­­விக்­­­கூ­­­ட­­­மும் செயல்­­­பட்டு வந்­­­துள்­­­ளது. அதில் மாண­­­வர்­­­கள் பலர் தங்கி பயின்­­­றுள்­­­ள­­­னர். அப்­­­போதைய பல்லவ மன்னன் நர­­­சிம்­­­ம­ வர்­­­மன், சம­­­ணர்­­­களுக்­­­காக ஏரா­­­ள­­­மான நிலங்களைக் கொடை­­­ய­­­ளித்­­­துள்­­­ளான். அங்கு பயின்ற மாண­­­வர்­­­களின் இருப்­­­பி­­­டங்கள் தோறும் சம­­­ணர் சிலை­­­கள் வழி­­­பாட்­­­டில் இருந்­­­துள்­­­ளன. அவை­­­தான் தற்­­­போதைய ஆய்­­­வில் கிடைக்கப் பெற்­­­றுள்­­­ளன என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!