பிரசவத்திற்கு வந்த பெண்ணை அடித்து உதைத்த போலிசார்

பிரசவத்திற்காக அரசு மருத்துவ மனைக்கு வந்திருந்த நிறைமாத கர்ப்பிணியை போலிசார் அடித்து உதைத்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசு. இவருக்கு முத்தாம்பிகை என்ற மனைவியும் முத்தமிழரசி என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். திருப்பதியில் இயந்திரப் பழுது பார்ப்பாளராக வேலை செய்கிறார் தமிழரசு. அங்கேயே சட்டம் பயின்று வந்த முத்தாம்பிகை 2வது முறையாகக் கருத்தரித்தார். பத்தாவது மாதத்தை எட்டிய நிலையில் சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவ மனையில் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

வெளியே மகள் முத்தமிழரசியுடன் அமர்ந்திருந்தார் தமிழரசு. அப்போது குழந்தை இடைவிடாது அழுதுள்ளது. இதைக் கேட்டு அங்கு பணியில் இருந்த மூன்று பெண் போலிசார், "குழந்தையின் அழுகையை நிறுத்து, இல்லையேல் இங்கிருந்து தூக்கிச் சென்றுவிடு!" என்று கூறினர். அதற்கு, "நானும் முயன்று பார்க்கிறேன். குழந்தை அழுகையை நிறுத்தமாட்டேன் என் கிறது," என்று தமிழரசு பதில் சொன்னார். இதையடுத்து, போலிசையே எதிர்த்துப் பேசுகிறாயா என்று கூறி அவருடன் போலிசார் வாக்கு வாதம் செய்தனர்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த முத்தாம்பிகை, தம் கணவருடன் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று போலிசாரிடம் கேட்டார். உடனே அவரையும் அவரது கணவரையும் அந்த மூன்று பெண் போலிசாரும் அடித்து உதைத் தனர். அவர்கள் முத்தாம்பிகையின் வயிற்றிலும் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த போலிஸ் உதவி ஆணையரின் கால்களில் விழுந்து தம்பதியினர் கதறினர். அவரும் தவறு செய்த போலிசார் மீது நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!