கண்மூடித்தனமாகத் தாக்கிய போலிசை கைது செய்யக் கோரி வேலைநிறுத்தம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் ராஜன், அவரது மனைவி மற்றும் மகனைத் தாக்கிய போலி சாரைக் கைது செய்யக் கோரி நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். இந்த மூவரையும் ஏராள மானோர் முன்னிலையில் லத்தி யால் தாக்கிய சிறப்பு போலிஸ் துணை ஆய்வாளர் முருகன், போலிஸ்காரர் விஜயகுமார், நம் மாழ்வார் ஆகியோர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களைப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்தி பொதுமக்கள் திங்கட் கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் கிடைத்ததும் போலிசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சம்பந்தப்பட்ட போலிசார் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதி கூறியதையடுத்து பொதுமக் கள் அப்போது கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் போலிசாரின் நடவடிக்கையைக் கண்டித்தும் மூன்று போலிசாரையும் கைது செய்து அவர்களை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் செங்கத்தில் நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நேற்று இயக்கப்படவில்லை. அவை அனைத்தும் செங்கத்தில் வரிசை யாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால் செங்கம் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆட்டோக்கள் செங்கம் பேருந்து நிலையம் அருகே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!