சென்னை: மேலும் 43 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

மென்பொறியாளர் சுவாதி ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப் பட்டதை அடுத்து சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 82 ரயில் நிலையங்களில் கண் காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் மேலும் 43 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத் தத் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தலைமைப் பாதுகாப்பு ஆணையர் எஸ்.சி.பார்ஹி தெரி வித்துள்ளார். கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டார். 24 மணி நேரப் பாதுகாப்பு அங்கு இருந்திருந்தால் சுவாதியின் மரணத்தைத் தடுத் திருக்கலாம் என்று கூறப்பட்டது.

போதிய ரயில்வே பாதுகாப்புப் படையினர் இல்லாததால் அவர் கள் சுழற்சி முறையில் பணி ஆற்றி வருகின்றனர். சுவாதி கொலைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்த ஒரே ஒரு ரயில்வே பாதுகாப்புப் படை வீரரும் அடுத்துள்ள கோடம் பாக்கம் ரயில் நிலையத்திற்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், "சென்னை மண்டலத்தில் மேலும் 1,700 ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுடன், பெண்கள் படைப் பிரிவின் ஒரு பகுதியாக 140 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது," என்று திரு பார்ஹி தெரிவித்தார்.

அத்துடன், பயணிகள் பாது காப்பிற்காக தேசிய அளவிலான ஒரு செயலியை ரயில்வே உரு வாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். "182 என்ற பாதுகாப்பு உதவி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரயில் தடங்களுக்கு இரண்டு புறமும் அமைந்துள்ள கல்லூரிகள், கல்விக்கூடங்களுக்குச் சென்று அதிகாரிகள் துண்டுப் பிரசுரங் களை விநியோகித்து வருகின் றனர்," என்றும் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!