விஜயவாடாவில் உருவாகும் ஏழுமலையான் மாதிரி கோயில்

திருப்பதி: விஜயவாடாவில் திரு மலை ஏழுமலையானின் மாதிரி கோயில் உருவாக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி பொது மக்களுக்கு இந்தக் கோயில் திறக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ் தானம் தெரிவித்தது. விஜயவாடாவில் பண்டார் ரோட்டில் உள்ள பிடபுள்யூடி மை தானத்தில் ஏழுமலையானின் மாதிரி கோயில் கட்டப்பட்டு வரு கிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் திறக்கப்பட்டு விசே‌ஷ பூசைகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர் களுக்குத் தினசரி சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, சிறிய லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் ஆயுர் வேத சிகிச்சை மையம், தேவஸ் தான மருத்துவ மையம், புகைப் படக் கண்காட்சியகமும் அமைக் கப்படுகின்றன. திருமலைத் திருப்பதி தேவஸ் தானத்தின் இணை நிர்வாக அதிகாரி கே. எஸ். சீனிவாசா ராஜு, மாதிரி கோயில் கட்டப்படு வதை நேரில் பார்வையிட்டார். கோயிலுக்குள் வைக்கப்படும் உண்டியல் காணிக்கையைக் கணக்கிடுவதற்குப் புதிய பிரிவு செயல்படும் என்றும் கோயிலில் 24 மணி நேரமும் தாசா சாகித்ய குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். பக்தர்களுக்கு சேவையாற்று வதற்காக தேவஸ்தான அதிகாரி களும் ஊழியர்கள் 800 பேரும் ஸ்ரீவாரி சேவார்த்திகள் ஆயிரம் பேரும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!