மதிய உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் பரிந்துரை

விருதுநகர்: தமிழகத்தில் ஏழை, எளிய மக்களும் கல்வியறிவு பெறச் செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி புகழாரம் சூட்டினார். காமராஜரின் 114ஆவது பிறந்த நாள் விழா விருதுநகரில் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியபோதே கனிமொழி மேற் கண்டவாறு குறிப்பிட்டார். "கிராமங்கள் தோறும் ஆயிரக் கணக்கான பள்ளிகளைத் திறந்து ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறச் செய்தவர் காமராஜர். அதனால்தான் தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை இன்று உயர்ந்துள்ளது. "கல்வி மட்டுமல்லாது மதிய உணவுத் திட்டத்தையும் காமராஜர் கொண்டு வந்தார். எனவே நாடு முழுவதும் பள்ளிகளில் செயல் படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்துக்கு மத்திய அரசு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்," என்று கனிமொழி வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தாம் மருத் துவராக காமராஜரே காரணம் என்றார். தமிழகத்தில் இன்றளவு பெயர் சொல்லும் அளவுக்கு உள்ள தொழிற்சாலைகள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத் தில் உள்ள நீர்த்தேக்கங்கள், அணைகள் அனைத்தும் காமராஜர் ஆட்சியில்தான் அமைக்கப்பட்ட தாகத் தெரிவித்தார். "மருத்துவப் படிப்பில் சேர நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் உள்ள ஒருவர் என்னிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அவ் வளவு பெரிய தொகை இல்லை என்று கூறினேன். அடுத்த நாள் நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது பணம் கேட்டவர் அங்கு இல்லை. "பலரிடம் அவர் லஞ்சம் கேட்ட தகவல் அறிந்த அப்போதைய முதல்வர் காமராஜர், குறிப்பிட்ட அந்த நபரை அப்பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார். நேர்மையாக நேர் முகத் தேர்வு நடத்தப்பட்டது. எனக்கும் மருத்துவராகும் வாய்ப் புக் கிடைத்தது," என்று ராமதாஸ் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!